Pages

Friday, April 8, 2011

சென்னை சூப்பர் கிங்ஸ் !!!



வெற்றி நமதே!!!

ரசிகர்களுக்கும்,வீரர்களுக்கும் மரியாதை குடுத்த ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ்..



Win


Come On CSK!

Friday, April 1, 2011

போதை மயக்கம் - 1

நாள் : 01/04/2011
நேரம் : காலை 07:10 மணி
இடம் : லாட்ஜ் ரூம்

யாரோ தட்ட நல்ல கனவு களைத்தும் கண் திறக்காமல் "டேய் லீவ் தானடா!". திரும்பவும் தட்ட "நண்பா பத்து நிமிசம்டா!". திரும்பவும் ஓங்கி தட்ட எரிச்சலுடன் " டேய் சொல்ரேன்லடா வெண்ண.." விழித்தால் போலீஸ். முகம் வியர்த்து தூக்கம் களைய "சார் என்ன சார்" என பதட்டத்துடன் கேட்க. "ஏண்டா பயப்படுற நீ தான் பண்ணியா?". கொஞ்சம் குழப்பத்துடன் "என்ன பண்ணியான்னு கேட்குறீங்க". சற்று எரிச்சலுடன் "தாயோளி நடிக்கதடா உன் மொகறைய பார்த்தா தெரியல குடிகாரப் பயலே! மனுசன நிம்மதியா தூங்க கூட விட மாட்டீங்களாட?" "சார் சும்மா... மரியாதையா பேசுங்க சார். இப்ப எதுக்கு காலங்காத்தால பஞ்சாயத்து பண்றிங்க? பசங்கள எங்க?" என கோபமாக போர்வையை விளக்கிக் கொண்டு எழ ஏட்டு ஓங்கி ஒரு எத்து விட எழுந்தவன் நிலை தடுமாறி கீழே விழுகிறான்."என்ன சார் அடிக்கிறீங்க?". ஏட்டு எரிச்சலுடன் "அடிக்காம உன் கையப்பருடா!".

Bottle

சிறிது பயம் கலந்த குழப்பத்துடன் வலது கையைப் பார்க்க ஒன்றும் இல்லாமல் எப்பவும் போல் இருக்க "என்ன சார்? அதான் ஒன்னும் இல்லையே? காலைலியே தண்ணிய கிண்ணிய போட்டீங்களா? போங்க சார் பேசாம. பசங்கள எங்க சார்?" ஏட்டு கையில் உள்ள லத்தியை வைத்து இடது கையை தொட்டு காண்பித்து "டேய் வெண்ண அந்த கைய பாருடா" என சொல்ல. சற்று எரிச்சலுடன் இடது கையை பார்க்க உள்ளங்கை முழுக்க இரத்தம். ஒன்றும் புரியாமல் "சார் என்ன சார் என்ன ஆச்சு? பசங்கள எங்க?". "செய்யுறதையும் செஞ்சுட்டு நடிக்கிறீங்களா?" என வெளியே தள்ள. "சார் ஒரு நிமிஷம் சார் கைலிய நல்ல கட்டிக்கிறேன்" என்று எழுந்து கைலிய ஒழுங்கு படுத்த கைலியில் பாதி இரத்தம். இடது புறம் நன்றாக திரும்பி பார்த்தல் பிரபுவின் மூக்கு கண்ணாடி, சிகரெட் பாக்கெட், போர்வை, பாய், பெல்ட் எல்லாம் இரத்தம். "போதும்டா வெண்ண நீ பார்த்தது போ" என்ன வெளியே தள்ள உடைந்து கிடந்தது பீர் பாட்டில் கண்ணாடி சில்களை தாண்டி வெளியே வந்தவன் அப்போது தான் உணருகிறான் வெளியே கேமரா, சன் டிவி ,கலைஞர் டிவி மைக் எல்லாம் இருக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் கதவின் ஓரம் நிற்க மற்ற போலீஸ் சுற்றி உள்ள மற்ற ரூம் ஆட்களை போக சொல்லி விரட்டி கொண்டிருந்தனர்.

ஏட்டு "டேய் நடடா வெண்ண" என்று சொல்லி தள்ள, இன்ஸ்பெக்டர் ரூம்குள் சென்ற மற்ற போலீசைப் பார்த்து "யோவ் எதையும் தொடாதீங்கயா, அந்த ரேகை பாக்குரவனுகள வரச் சொல்லியாச்சா? யோவ் இப்ப தானைய சொன்னேன் தொடாதனு எல்லாம் எவிடேன்ஸ்யா!" மறுபடி ஒருமுறை அவனைப் பார்த்துவிட்டு "எல்லாம் பெரிய இடத்து பயலுக ஜாக்கிரதை." சுற்றி இருந்த கூட்டத்தில் எல்லாரும் ஒரு பயம் கலந்த குழப்பத்துடன் பார்க்க ஏட்டு மட்டும் பொறுப்பாக அவனை தள்ளி கொண்டு போய் ஜீப்பை காண்பித்து ஏறி உட்காருங்க சாமி. பூஜை எல்லாம் கோவில்ல (ஸ்டேஷன்ல) போய் வச்சுக்கலாம். ஒன்றும் புரியாமல் நைட் அடித்த அரை போதையுடன் ஜீப்பில் ஏறுகிறான் கார்த்திக். உள்ளே முருகன் அழுதுகொண்டு இருக்க "என்னடா இதெல்லாம்? என்னடா ஆச்சு? பசங்கள எங்கடா?".அழுதுகொண்டே "டேய் சரவணன் செத்துட்டண்டா. நான் எழும்போது நீ மட்டும் தாண்டா தூங்கிட்டு இருந்த. இந்த போலீஸ் அடிக்கிறாண்டா". சரிடா அழாம சொல்லு. வெளியில் இருந்த லாட்ஜ் மேனேஜரை பார்த்து "சார் அப்பாட்டையும் அண்ணன்ட்டையும் சொல்லிருங்க சார்" என சொல்ல அவர் "இப்படி பண்ணிட்டேங்கலே தம்பி" என சொல்ல "யோவ் சொல்லுய முதல்ல".கடுப்பான ஏட்டு "வெண்ணைகளா பேசாம இருக்க மாட்டீங்களா? யோவ் என்னைய அந்த இன்ஸ் சொல்றான்? " என வெளியே நின்று கொண்டிருந்த போலீசிடம் கேட்க. இன்னொரு போலீஸ் "சார் நீங்க கிளம்புங்க அவர் ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வந்துருவாராம்". உடனே ஜீப்பில் பின்னாடி உட்கார்ந்து இருந்த ஏட்டு விலங்கை இருவர் கையிலும் ஜீப்புடன் சேர்த்து மாட்டிவிட்டு இறங்கி போய் முன்னாடி உட்கார்ந்து கொண்டு டிரைவரை பார்த்து "யோவ் எடுயா யாருக்கு காத்துட்டு இருக்க? உன் பொண்டாட்டியா வருது?". ஜீப் நகர ஆரம்பித்த உடனே "இப்ப சொல்றா அழாம சொல்லு" என முருகனிடம் கூற. முருகன் அழுதுகொண்டே ஆரம்பிக்கிறான் "எழுந்து வெளிய வந்தா சேதுவும் இன்னொருத்தனும் முன்னாடி போற ஜீப்ல போறானுகடா, சரவணன்ன ஆம்புலன்ஸ்ல ஏத்திட்டு போனானுகடா.". கார்த்திக் உடனே கொஞ்சம் சத்தம் கம்மியான குரலில் "சரி உன் மொபைல் குடு?". முருகன் உடனே "இல்லடா நண்பா!" கார்த்திக் கோபத்துடன் "டேய் மயிறு நான் தான் கைலி கட்டிருக்கேன் உனக்கென்னடா?". முருகன் மறுபடியும் அழுது கொண்டே "நான் எழும்போதே ஒரு போலீஸ் எல்லா மொபைலையும் எடுத்து பிளாஸ்டிக் கவர்ல போட்டு வச்சுருந்தாண்டா". கார்த்திக் அப்படியே தலையில் கை வைத்து உட்கார்ந்து விட ஜீப் வேகமாகா போய்க் கொண்டு இருந்தது.

நாள் : 01/04/2011
நேரம் : காலை 07:40 மணி
இடம் : போலீஸ் ஸ்டேஷன்

ஸ்டேஷன் வந்துவிட இறங்கி உள்ளே செல்ல சரவணன் பனியன் டவுசர் (தூங்கும் உடை) அணிந்து மற்ற மூவர் போலவே உட்கர்ந்து உள்ளான். கார்த்திக் மெல்ல ஏட்டிடம் சென்று "சார் ஏப்ரல் பூல் தான ஆக்க பாக்குறீங்க? நாங்கல்லாம் ஏமாருவமா?" என சிரிக்க ஏட்டு ஓங்கி ஒரு அரை வைக்கிறார். முருகன் கார்த்திக்கிடம் மெல்ல "மச்சி இப்படி தாண்ட இந்த ஆளு அடிச்சிட்டே இருக்கான் இப்ப எதுக்குடா அடிச்சான்?" அதற்கு கார்த்திக் "சரி அத விடு அங்க பாரு அவனுக இருக்கானுக நம்மள ஏப்ரல் பூல் ஆக்க பாத்துருக்கணுக" என சொல்லிக்கொண்டே நடக்க. ஏட்டு "போங்கடா போய் உங்க கூட்டாளிகளோட போய் உட்க்கருங்க" என சொல்லி விட்டு தூரத்தில் இருந்த இன்னொரு போலீசைப் பார்த்து "யோவ் இவனுகள பார்த்துக்க காலைலயே ஒரு எழவு, வாய கழுவிட்டு ரெண்டு இட்லிய பிச்சு போட்டுட்டு வரேன்" என சொல்லிகொண்டே வேகமாக நடந்தார். கார்த்திக் சிரித்துக் கொண்டே சரவணனிடம் போய் "மச்சி செம நாடகமா இருக்கு? யார ஏப்ரல் பூல் ஆக்க பாக்குற?எங்க அண்ணனும் இதுல கூட்டாளியா? அவன்தான் இந்த போலீஸ் எல்லாம் அனுப்புனனா?" உடனே கடும் கோபத்துடன் சரவணன் "என்னடா கிறுக்கு பூ.. மாதிரி பேசுற?". "டேய் நீ தாண்ட செத்துட்டேன்னு இவன் சொன்னான்!". "டேய் செத்தது பிரபுடா, என்னையே போலீஸ் தாண்டா எழுப்புனனுகா. எங்கள ஜீப்ல ஏத்திட்டு, பிரபுவ ஆம்புலன்ஸ்ல ஏத்திட்டு போய்டனுகடா.வண்டி நகழும் பொது தான் முருகன் வெளிய வந்தான் அவன் என்ன பார்க்கல அதான் தப்பா சொல்லிருக்கான்." அப்படியே கார்த்திக்கும் முருகனும் இடிந்த வண்ணம் உட்கார மழை பெய்ய துவங்கியது..
(தொடரும்..)

Tuesday, January 25, 2011

சிங்கப்பூர்ல வேலை - 2

எதோ நம்மால முடிஞ்சது..

வேலை 1
அனுபவம் : மூன்று வருசத்துக்கு மேல .NET (C#, ASP.NET, ADO.NET, Web Services, XML, XSLT, XPATH)
இடம் : சிங்கப்பூர்
குறிப்பு : அனுபவம் நிதி துறைல இருந்தா இன்னும் சிறப்பு.

வேலை 2
அனுபவம் : மூன்று வருசத்துக்கு மேல Fortran
இடம் : சிங்கப்பூர்

வேலை 3
அனுபவம் : Proficiency in CA-OpenRoad development and Ingres RDBMS and ability to draft technical specifications and experience in integrating MS office with OpenRoad/Ingres
இடம் : சிங்கப்பூர்

வேலை 4
அனுபவம் : நாலு வருசத்துக்கு மேல .NET ( C++, C#, ASP.NET, Windows Services)
இடம் : சிங்கப்பூர்

போற வர்ற செலவு எல்லாம் கம்பெனி பாத்துக்கும்.
பாஸ் போர்ட் கட்டாயம் இருக்கணும்.
யாரவது ரெடியா இருந்தா என்னை தொடர்பு கொள்ளுங்கள்

மின்னஞ்சல் : ponkarthikbtech@yahoo.co.in
தொலைபேசி : 09901153024

டிஸ்கி :

மக்கா இது கன்சல்டன்சி கிடையாது எங்க கம்பெனி நேரா எடுக்குறாங்க..
நல்ல காசுக்கார கம்பெனி நீங்க எதிர் பாக்குறத விட நல்லா சம்பளம் குடுப்பாங்க..

Monday, January 24, 2011

சிங்கப்பூர்ல வேலை

நம்ம மக்களுக்கு நம்மால முடிஞ்ச சின்ன உதவி ..

வேலை 1
அனுபவம் : நாலு வருசத்துக்கு மேல .NET
இடம் : சிங்கப்பூர்

வேலை 2
அனுபவம் : மூன்று வருசத்துக்கு மேல Fortran
இடம் : சிங்கப்பூர்

போற வர்ற செலவு எல்லாம் கம்பெனி பாத்துக்கும்.
பாஸ் போர்ட் கட்டாயம் இருக்கணும்.
யாரவது ரெடியா இருந்தா என்னை தொடர்பு கொள்ளுங்கள்

மின்னஞ்சல் : ponkarthikbtech@yahoo.co.in
தொலைபேசி : 09901153024

டிஸ்கி :

நல்ல காசுக்கார கம்பெனி நீங்க எதிர் பாக்குறத விட நல்லா சம்பளம் குடுப்பாங்க..

Sunday, December 19, 2010

ரஜினியா கவுண்டமணியா?

நண்பன் ஒருத்தன் ஒர்குட்ல தாடியோட இருந்த போட்டோவ பார்த்துட்டு உனக்கு தாடி நல்லா இல்லடா, நம்ம தலைவர் ரஜினி மாதிரி ஹேர் ஸ்டைல் வை சூப்பரா இருக்கும்னு கால் பண்ணி சொன்னான். சொன்னது மட்டும் இல்லாம ரஜினி போட்டோவ மெயில் வேற அனுப்புனான். சரி நானும் இவ்வளவு சொல்றானே செய்து பார்ப்போம்னு சொல்லி காலைல எழுந்திரிச்சு முதல் வேலையா கூட இருக்க கொஞ்சம் ஹிந்தி தெரிஞ்ச நண்பன் ஒருத்தன கூட்டிகிட்டு முடி திருத்தகத்துக்கு போனேன். (நமக்கு தான் ஹிந்தி தெரியாதே என்ன பண்ண?) போகும் போதே நண்பா ரஜினி ஹேர் ஸ்டைல்ல வெட்டனும்டா அவன்ட தெளிவா சொல்லிருனு சொல்லிட்டே நடக்குறோம். அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் நண்பா நீ வா போலாம்னு இழுத்துட்டு போறான்.

கடைசியா கடையை கண்டுபிடிச்சுட்டோம். உள்ள நுழைஞ்ச உடனே சிரிச்ச முகத்தோட வாங்க வாங்கனு ஹிந்தில சொன்னாரு(ஹிந்தி உனக்கு எப்படி தெரியும்னு கேட்க கூடாது). உள்ள அவர தவற யாருமே இல்ல. டேய் நண்பா யாருமே இல்லடா வாடா வேற கடை பார்க்கலாம். அதான் இவர் இருக்கர்லடா போதும் உட்க்கார்டானு மட்டைய கட்டி இறக்கிட்டான். டேய் நேத்து நீ வச்சிருந்த சரக்க நான் குடிசுட்டேன்னு கோபம் எதும் இல்லையே?.ஏன்டா சம்மந்தம் இல்லாம இப்ப அத கேக்குற? இல்லடா அத மனசுல வச்சு பலி வாங்கிறாதடா உன்ன நம்பி தான் மண்டைய குடுக்கிறேன். சரிடா நான் பாத்துக்கிறேன். டேய் அந்த ரஜினி ஸ்டைல் சொல்ற முதல்ல. அவனும் எதோ எதோ சொல்ல கடைசியா பழைய செய்திதாள்ல இருந்து ரோபோ ஐம்பதாவது நாள் படத்த காண்பிச்சான். டேய் இந்த ஸ்டைல் இல்லடா வேற ரஜினி ஸ்டைல்னு சொன்ன அவனுக்கு தெரியல. சரி வேற வழி இல்லாம கூட இருந்தவன அனுப்பி ரூம்ல இருந்த மடி கணினிய எடுத்துட்டு வர சொன்னேன் வஞ்சுக்கிட்டே போயிட்டு வந்தான்.

மெயில் இன்பாக்ஸ் திறந்து நண்பன் அனுப்பிருந்த போட்டோவ காண்பிச்சேன். சரி உக்காருங்கன்னு சொன்னான். கடவுள் மேல பாரத்த போட்டுட்டு இவனுக ரெண்டு பேரையும் நம்பி உக்காந்தேன். உட்க்காந்த உடனே எதோ துணி எல்லாம் போத்தி தண்ணி எல்லாம் தொளிச்சு மாவு பிசையா போற மாதிரி ஆரம்பிச்சான். பையா ஒரு நிமிஷம் டேய் நண்பா சொல்லீட்டல்ல ரஜினி ஸ்டைல் தான? அட அமடானு சொல்லிட்டு திரும்ப எதோ ரெம்ப நீளமா ஹிந்தில சொன்னான். டேய் நண்பா இதுல ரஜினி பேரே வரலையடா? டேய் பேசாம உட்க்காருடா சரியா வெட்டுவான். சரி இதுக்கு மேல பேசுனா எந்திருச்சு போயிடுவான்னு சொல்லிட்டு நானும் அமைதியா உட்கார்ந்துட்டேன். அவன் ஆரம்பமே திருப்பதில எடுக்கற மாதிரி சவர கத்திய எடுத்தான். யோவ் யோவ் இருயா!! நண்பா என்னடா இது? அங்க பார்டா பிளேடு மாத்துரார்டா.ஏன்டா பதர்ற? டேய் பக்கத்துலயே இருடா வேற எதும் பண்ண கூடாதது பண்ணிற போறான். சரிடா நான் பக்கத்துலயே நிற்கிறேன்.

சரி நண்பன் தான் பக்கத்துல நிட்க்கிரானு நம்பி திரும்ப உட்க்கார்ந்தேன் தொடக்கத்துலயே மொத்தமா கொத்தா முன்னாடி இருக்க முடிய பிடிச்சான். எனக்கு உயிரே போயிருச்சு.யோவ் யோவ் இருயானு எழுந்திருசுட்டேன். டேய் இப்ப என்னடா? நான் தான் பக்கத்துல இருக்கேன்லடா அடப்பாவி இந்த முன்னாடி முடி வளர்க்க ஒரு வருஷம் ஆச்சுடா. அவன பாத்து வெட்ட சொல்றா. நண்பா அந்த லேப்டாப்ப எடுத்து கண்ணாடி பக்கத்துல வை. அந்த பார்த்துக்கிட்டே அது மாதிரியே வெட்டட்டும் நானும் அப்படியே சரி பார்த்துக்குவேன். நீ என்ன பெரிய வாத்தியாரா சரி பார்க்க. டேய் இது என் மண்டடா நான் தான் எல்லாம். போய் தொலன்னு எடுத்து முன்னாடி வச்சுட்டான்.

திரும்பவும் உட்க்கார்ந்தேன். இப்ப முன்னாடி வேண்டாம் பின்னாடி இருந்து ஆரம்பின்னு நண்பன் அவர்ட சொல்ல அவரும் ஆரம்பிச்சு ஒரு அஞ்சு நிமிஷம் வேட்டிகிட்டே இருந்தான். ஒன்னும் புரியல பின்னாடி இருந்த கண்ணாடியும் தெரியல. டேய் அந்த கண்ணாடிய எடுத்து தெரியுற மாதிரி பிடிடானு சொன்னேன். போடனுட்டன் அப்புறம் கெஞ்சி கூத்தாடி சரின்னு ஒத்துக்கிட்டான். ஒரு வழியா பின்னாடி வெட்டி முடிச்சுட்டன். இப்ப வலது பக்கம் காதுக்கு மேல வெட்ட வந்தான் இப்ப தான் நல்லா கவனிக்குரேன் அவன் கை பயங்கரமா நடுங்குது.அடப்பாவி இருடான்னு சொல்லி மறுபடி எழுந்துரிச்சேன். நண்பன் ஒரு கைல கண்ணாடியோட இப்ப என்னடா? நண்பா அவன் கை பயங்கரமா நடுங்குது காத போட்டர போறான்டா. டேய் அதெல்லாம் நடக்காது நான் பர்துக்கிரேண்டா? என்ன பார்ப்ப காத வெட்டுனதுக்கு அப்புறம் எப்படி வெட்டுனான்னா? போதும்டா சாமி ரஜினி ஹேர் ஸ்டைல் இல்லாமகூட இருந்திறலாம் ஆனா காது இல்லாம அம்மாடியோவ் ஆள விடுடா. டேய் பாதி வெட்டி பாதி வெட்டாம? என்னது பாதி வெட்டிட்டானா? டேய் முடிய சொன்னேன்டா உட்க்காருடா. அப்படினா ஒரு சின்ன வேண்டுகோள். இப்ப என்னடா? அவன் அந்த சவர கத்திய உபயோகபடுத்தக்கூடாது. பின்ன எப்படிடா சவரம் பண்றது? அந்த ட்ரிம்மர் மெசின்?

சரி இப்ப எல்லாம் முடிஞ்சு முன்னாடி வந்தான். திரும்பவும் கொத்தா நிறையா முடிய பிடிச்சான் திரும்பி நண்பா ஒரு வருஷம்டா. மெதுவா வெட்ட சொல்டா வெட்டிட்டா வளர வேற செய்யாதுடா. சரிடா திரும்பு சாவடிக்காத. மறுபடியும் நிறைய முடிய பிடிச்சான் திரும்பி சொல்லலாம்னு பார்த்த திரும்ப முடியல பார்த்த இவனும் அவனும் கூட்டு சேர்ந்து தலைய இவன் அழுத்தி பிடிக்க அவன் கதற கதற வெட்டி முடிச்சுட்டன்.

கடைசியா லேப்டாப்ல ரஜினி தெரியுறாரு கண்ணாடிய பார்த்தா கரகாட்டக்காரன் கவுண்டமணி இருக்காரு. அடப்பாவிகளா கதாநாயகன் மாதிரி வெட்ட சொன்ன காமெடியன் அக்கிட்டீங்கலேடா. போங்கடா டேய் இதுக்கு லேப்டாப் வேற நாலு கண்ணாடி வேற அப்படின்னு கிளம்புனா. கடைக்காரன் முறைக்குறான் சரி நம்ம பண்ண அலும்புக்கு தான் முறைக்குறான்னு பார்த்தா வெளிய போற வழிய மறைக்குறான் என்னன்னு கேட்ட எதோ ஹிந்தில விறான் நண்பன்ட்ட என்னனு கேட்ட காசு கேட்க்குறாண்டா. எவ்வளவுடா முன்னூறு ரூபா டா இந்த கவுண்டமணி கட்டிங்க்க்கு இது வேறயா தமிழ்ல திட்டிக்கிட்டே கொடுத்தேன். அவன் என் நண்பன்ட்ட எதோ ஹிந்தில சொல்லிட்டு இருந்தான் நான் நடக்க ஆரம்பிச்சுட்டேன்.

வெளிய வந்த உடனே நண்பா அவன் உண்ட எதோ சொல்லிட்டு இருந்தனே என்னடா அது? அத விடு நண்பா. ஏன்டா எதும் கெட்ட வார்த்தையா? இல்ல நண்பா வேகமா நட. அட சும்மா சொல்டா. உனக்கு முன்னாடி ஒரு குழந்தை முதல் தடவை முடி வெட்ட வந்துச்சாம் அது கூட இந்த அளவுக்கு இம்சிக்கலன்னு சொன்னனடா. போடா டேய் குழந்தைக்கு அதும் பட்னா குழந்தைக்கு ரஜினி தெரியுமா கவுண்டமணி தெரியுமா? அதும் இவன் கடைக்கு நம்மள தவற வேற ஆளா உன்ன ஏமாத்துறான் நண்பா. அந்த குழந்தைக்கு ரஜினி தெரியுமோ கவுண்டமணி தெரியுமோ தெரியாதுடா. ஆனா உன்ன மாதிரி இம்சிக்க தெரியாதுடா. அது மட்டும் இல்ல இன்னொன்னும் சொன்னான் உன்ன இனிமே இந்த பக்கம் அந்த லப்டோப்போட பார்த்தான் சவர கத்திய நடு மண்டைல நச்சின்னு இறக்கிருவேன்னு சொல்லிருக்கன். போடா டேய் போடா. ரூம திறந்து உள்ள போலாம்னு பார்த்தா எல்லாரும் மொத்தமா எதிர் பார்த்து நின்னு சிரிக்கிராணுக. இவன்தான் லேப்டாப் எடுக்க வந்தப்ப எல்லாருட்டையும் சொல்லிட்டு வந்திருக்கான். கால்ல இருந்த செருப்ப எடுத்துட்டு விரட்டுனா....

Karthik

சிரிச்சாச்சா போங்கயா பொய் கருத்து குத்து குத்திட்டு பிள்ள குட்டிகள படிக்க வையுங்க..

Monday, November 1, 2010

அறியாத வயதில் புரியாத வெற்றி..

முஸ்கி : சில இடங்களில் வாசிக்க கடினமாக இருக்கும், எதார்த்தத்தை கொண்டுவர முயன்றிருக்கிறேன். தவறு இருந்தால் பின்னூட்டத்தில் கூறவும்.

நான் சிகரெட்டை அனைத்து விட்டு உள்ளே நுழைய, போர்வையை விளக்கி கொண்டு டேய் நண்பா விடிஞ்சா மேட்ச்டா, போன வருஷம் நம்ப இதே பைனல்ல இதே 10th டீம்ட தோத்துட்டோம் என மெல்ல ஆரம்பித்தான் ஆனந்த்.. வெண்ண தூங்குடா, காலைல எழுப்புன உடனே எழுந்திரிக்கல செத்த. விடு நண்பா அதெல்லாம் எழுந்திரிசுருவான் என தடுத்தான் ராஜேஷ். கிழிச்சான் இன்னைக்கு என்னடா ஆச்சு? பிளான் என்னடா நாலுமணிக்கு போய் ப்ராக்டிஸ். எத்தன மணிக்குடா கிரௌண்டுக்கு வந்தான். சொல்ற வெண்ண. விடுடா டேய் நீ தூங்குடா என போர்வையை விரித்தான் ராஜேஷ். படுத்துகொண்டே டேய் கார்த்தி நான் எப்படி நம்ம டீம்ல சேர்ந்தேன் நியாபகம் இருக்கா? இருக்குடா மறக்க முடியுமா அத. அப்ப தாண்ட ஊர்ல இருந்து வந்தேன். நைட் ஸ்டுடி ஆரம்பமாயிருச்சு. கதவ பூட்ட போனணுக சண்ட போட்டு உள்ள வந்து உட்கர்ந்தா. நம்ம வாடன் இன்பா வந்துட்டாரு. புக்க தேடுனா எல்லாம் பெட்டிக்குள்ள இருக்கு ஊருக்கு போகும்போது பூட்டிட்டு போனது. அப்ப தான் ஒரு நோட்ட குடுத்து காப்பதுன. நானும் வேகமா வாங்கி படிக்கிற மாதிரி நடிச்சா அது எழுதாத நோட்டு. அவர் போனதும் தான் கேட்டேன் யாருடா நீ பெட்டிய என் பக்கத்துல வச்சுருக்க?

Cricket

அப்ப தான் சொன்ன நான் புதுசு வேற ஸ்கூல்ல இருந்து வந்துருக்கேன்னு. காலாண்டுக்கு அப்புறம் ஏண்டா? அங்க கொஞ்சம் பிரச்சன... என்னடா ஏதும் பிட் அடிச்சு மாட்டிகிட்டியா? இல்ல, பின்ன? ஒரு பையன அடிச்சுட்டேன். அட பெரிய ஆளா இருப்ப போல. சரி சண்ட போட்டதுக்க வெளிய அனுப்புனாணுக.ஆமா H.M ரூம்ல வச்சு அவர் பையனையே அடிச்சுட்டேன்ன. டேய் அப்பவே உன்ன பார்த்த கொஞ்சம் பயம். ஏன்டா அடிச்சா? என் நண்பன் பேசுனதுக்கு போர்ட்ல பேர் எழுதி போட்டண்டா அதான். சரின்னு பசங்க எல்லாம் இந்த வாரம் லீக் ஆரம்பிக்குது நண்பா நாளைக்குள இருந்து ப்ராக்டிஸ் பண்ணும்னு சொல்லிட்டு இருந்தாங்க. நம்ம ரூம்ல மொத்தம் 10 பேர்தான் இன்னும் ஒருத்தன் மதன் அவன் பக்கத்துக்கு ரூம். அவன சொல்லி வரசொன்னா. அவன் நான் லேட்டா வரேன் சொல்லிட்டான். டேய் நம்ம தான் 8th மெயின் டீம், நம்ம டீம்ல சேர அவன் அவன் அலையுறான் இவன் என்னடானா.சரி விடுடா இந்த மேட்ச் பார்போம் இல்ல நம்ம B டீம் ஜெகன எடுத்திருவோம்டா. சிவ பூஜைல கரடி புகுந்த மாதிரி நீ வந்து நான் வரேன்டனு சொன்ன. பசங்க எல்லாம் என்ன ஒருமாதிரி பாத்தானுக. டேய் நான் ஒன்னும் சொல்லலடா அவனா தான் கேக்குறான் போல.. சரியா சாப்பிட பெல் அடிச்சுது தப்பிச்சோம் பிளச்சோம்னு ஓடிட்டேன். அங்க சாப்டர இடத்துல பார்த்த பக்கத்துல நீ? ஏன்டா ஊர்ல இருந்து வந்தோம்னு ஆயிடுச்சு???

சாப்ட்டு தட்ட ரெண்டு பேரும் கழுவீட்டு நடக்கும் பொது நீ கேட்ட நான் உங்க டீம்ல ஆடுரேன்னு சொன்னதுக்கு அவனுக ஏண்டா உன்ன முரச்சாணுக? டேய் இங்க 8th A டீம் B டீம் Main டீம்னு மூணு இருக்கு. மத்த ரெண்டு டீம்ளையும் நல்ல அடுரவுங்கள மெயின் டீம்ல எடுத்துப்போம். மெயின் டீம் மட்டும் தான் மத்த கிளாஸ் மெயின் டீமோட ஆடனும். மத்த டீம்லாம் உள்ளுக்குலயே ஆடிப்பாணுக.
இப்ப நம்ம ரூம்ல இருக்க 10 பேருமே 8th மெயின் டீம்ல இருக்கோம் மதன் மட்டும் தான் வேற ரூம். அதுக்கே வாடன், மத்த ரூம் பசங்க எல்லாம் கடுப்புல இருக்கானுக. நம்ம ஜெயிகனும்னு நினைக்கறது நம்ம 10 பேர் மட்டும் தான் இப்ப நீயும் ஒருத்தன் ஆனா நம்ம தோக்கணும்னு மத்த எல்லாரும் நினைக்குராணுக. இப்ப போய் நீ நேர மெயின் டீம் வரேன்னு சொன்ன அதும் நம்ம ரூம்ல இருந்து. அதும் என்ன வேற பாத்துக்கிட்டே சொன்னியா அதான் எல்லாரும் என்ன சந்தேக படுராணுக. இல்லடா நான் வந்த உங்க டீமா ஜெயிக்க வச்ருவண்டா. டேய் இவ்வளவு சொல்லியும் உனக்கு புரியலையா? என் தட்ட கொண்டு போ நான் உச்சா போயிட்டு வரேன்..

அப்புறம் நீ ரூம்ல போய் எல்லாருட்டையும் தனி தனியா இதே டயலாக் சொல்லிருக்க. உன்ன எப்படியோ சரிகட்டி வச்சோம் ஆனா நல்ல உதவி பண்ணடா எல்லா நேரத்துலயும். நீ எங்க ரூம்னால உன்ன எந்த டீம்ளையும் எடுத்துக்கல. ஒரே கிளாஸ் வேற பக்கத்துலயே இருப்ப. கஷ்டமா இருக்கும். நான் மெயின் டீம்ல சேர தம்மடிச்சு பலகுனேன். நீ என்கூட சேர தம்மடிச்சு பழகுன. லீகுல லாஸ்ட் மேட்ச் நம்ம அதுக்கு முன்னாடியே செமிஸ்க்கு செலக்ட் ஆயிட்டோம். நான் ஊருக்கு போய்டேன் நம்ம உதயா கேப்டன், ஜெகன் மதன் எல்லாரும் டீம்ல இருக்கனுகனு நான் கிளம்பிட்டேன். மதன் அந்த பொண்ணு பிரச்சனைனால வர மாட்டேன்னு சொல்லிட்டான். அப்ப தான் உதயா எங்க கடைக்கு S.T.D பண்ணி கேட்டான் நான் தான் உன்ன எடுத்து ஆட சொன்னேன். வாடனுக்கு நம்ம மேல செம கடுப்பு அவர் மாப்பிளைய எடுக்கலைல.மேட்ச் முடிஞ்ச உடனே நீ கூப்டப்ப நான் கடைல இல்ல அப்பாட்ட சொல்லிருக்க அப்பா கார்த்தி டீம் ஜெயிசுருசுனு. நான் வீட்டுக்கு வந்த எங்கப்பா ரெண்டு டோஸ் விட்டாரு. அப்பறம் பூத்ல இருந்து வாடனுக்கு பண்ணி கேட்ட 220 சேஸ் பண்ணி ஜெயிசுட்டீங்கனு சொன்னாரு. நீ 82 ரன்னு அதுல 4 சிக்ஸ்னு வேற சொன்னாரு. அப்பவே முடிவு பண்ணிட்டேன் இனிமே நம்ம ரூம் தாண்டா மெயின் டீம்னு.வந்து கேட்ட உதயா உன்ன புகல்றான் மச்சி அவன் 3 விக்கெட் ,82 ரன்னு அதும் உன் பேட்ட வச்சுடான்னான்.உடனே மதன தூக்கிட்டு உன்ன எடுத்தோம்.இலியாஸ் "டேய் வெண்ணைகளா அவன சொல்லிட்டு நீங்க கத பேசிட்டு இருக்கீங்களா மூடிட்டு படுங்கடா". "ஆமா நண்பா வா ஒரு தம்ம போட்டு வந்து படுப்போம்". டேய் சும்மா சும்மா தம்மடி அப்புறம் ரெண்டாவது ரன்லயே முக்கு. விடுடா பாத்துக்கலாம்...

10th டீம் பற்றியும் பைனல்லும் நாளைக்கு..(தொடரும்)

Sunday, October 10, 2010

நான் ஒன்னும் பன்னலம்மா!

Child Friends

கார்த்தியும் ராஜேஷும் மூச்சு முட்ட ஓடிவர வீட்டிற்குள் நுழைந்ததும், கார்த்தி அம்மா ஏண்டா டேய் மெதுவா வாங்கடா விழுந்துட்டீங்கனா? போய் முகத்த கழுவிட்டு வாங்க சாப்டலாம். கார்த்தி மெதுவாக இல்லம்மா அது.... உடனே அம்மா டேய் என்னடா ராஜேஷ் வீட்ல எதும் சாப்டிங்களா? போங்கடா போயிட்டு சீக்கரம் வாங்க. அதற்குள் ராஜேஷ் அம்மா "ஓடவா செய்றீங்க உங்க ரெண்டுபேரு காலையும் உடைச்சு போடணும்டா" என உள்நுழைய. கார்தியம்மா கேட்டிங்களா அவனுக என்ன பன்னானுகனு நீங்க அவனுகளுக்கு நல்லா இப்படி சாப்பாடு போடுங்க அவனுக இன்னும் நல்ல சேட்ட பண்ணட்டும். எண்ணக்க என்ன பன்னாணுக? அவனுகட்டயே கேளுங்க. டேய் என்னடா பண்ணீங்க? அம்மா அதுவந்து..

டேய் ராஜேஷ் நீ சொல்ற அவன் கிடக்கான். அம்மா என்று திருதிருவென்று விழிக்க. டேய் சொல்லுங்கடா. அம்மா நாங்க எப்பவும் விளாடுரமாரி நம்ம முனியாண்டி கோவில்ட விளையாடிட்டு இருந்தமா, அப்பபப.. டேய் சொல்லுங்கடா. நான் ஒரு பந்த சாக்கடைக்குள்ள அடிசுட்டேம்மா. சரி இதுக்கா பசங்கள திட்டுற?அதுமட்டுமா மேல சொல்லுங்கடா.. டேய் என்ன நடந்துச்சு முழுசா சொல்லுங்கடா. இல்லம்மா அப்பறம் கார்தியடிச்ச பந்து அசோக் மேல பட்டு அவனும் சாக்கடைல விழுந்துட்டாம்மா. அவன தூக்க போனா அவன் உன்னால தான்னு சொல்லி கல்லால அடிச்சுட்டு ஒடுனனா, இவனும் கல்லால திரும்ப அடிச்சான் அது அஞ்சாநம்பர் வீட்டு கண்ணாடில பட்ட்ருசுமா.. டேய் மேல அடிஎதும் பட்ட்ருக்காடா? என உடலை அம்மா துழாவ , அப்பறம்? கார்தியம்மா என்ன கதையா கேக்குறீங்க?

விடும்மா ஒரு கண்ணாடி தான வாங்கிகொடுத்துருவோம். டேய் இனிமே பார்த்து விளாடனும் சரியா? சரிம்மா.. கார்தியம்மா அத விடுங்க எங்க வீட்ல என்ன பன்னானுகனு கேளுங்க? என்னடா இது? இல்லம்மா நாங்க மேல பட்ருந்த சாக்கடைய கழுவ தான் போனம். அதுக்குள்ள பால்காரன் வந்தான். அவன்ட வாங்கி வைக்கும் பொது ராஜேஷ்தம்மா கொட்டிட்டான். அப்பரம் அத தொடச்சுட்டு அதே அளவுக்காக கொஞ்சம் தண்ணி ஊத்த சொன்ன இவன் நெறையா ஊத்திட்டம்மா. சரி கொஞ்சத்த கீழ ஊத்திட்டு வைக்கலாம்னு ஊத்துனோம் அப்ப இவன் தம்பி கோபி பார்துட்டாம்மா. அப்ப அவன் பால கீழயா ஊத்துறீங்க அம்மா வந்ததும் சொல்ரேன்டின்னு சொன்னான். சரி சரி விடும்மா இங்க பால் இருக்கு எடுத்து போய் காபி போடு விடும்மா. இனிமே இப்படி பன்னதிங்கடா.. இப்ப சாப்டலாம் வாங்க..

கார்தியம்மா முழுசா கேளுங்கா சொல்லுங்கடா என்ன பண்ணீங்கனு. அம்மா அப்ப கோபிட்ட சொல்லாதடா உனக்கு என்ன வேணுனாலும் தரோம்னு சொன்னோம்,அவந்தம்மா அந்த கிரைண்டர்ல உக்காந்து சுத்தனும்ன்னு சொன்னான். டேய் என்னடா பண்ணிங்க அம்மா பதட்டத்துடன். இல்லம்மா அந்த மாவு தள்ளும்ல அதையும் இன்னொன்னு பெருசா இருக்கும்ல அதையும் மூணு பேரும் சேந்து வெளிய போட்டுட்டு அவன உட்க்கார வச்சு சுச்சு போட்டம்மா அப்ப தான் ராஜேஷ் அம்மா வந்தாங்க வந்த உடனே சுச்ச அமத்திட்டு அவன தூக்கி எதோ பாத்தாங்க. பாத்துட்டு எங்கள அடிக்க வந்தாங்க அதன் வேகமா ஓடிவந்தோம். மலரு கோபிக்கு எப்படி இருக்கு என்று இடுப்பில் வைத்திருந்தவன வாங்க. எருமைகளா அறிவு இல்ல எது எதுல விலாடராதுன்னு.. அப்பா வரட்டும் உங்க ரெண்டு பேரையும் கொண்டு போய் ஆஸ்டல்ல சேத்ததான் சொன்ன படி கேப்பீங்க. அம்மா ஆஸ்டல் வேண்டாம்மா நாங்க இங்கயே இருக்கோம் இனிமே சேட்ட பண்ண மாட்டோம் என அழ.. சரி போய் தட்ல சோறு போட்ருக்கேன். போய் சாப்பிடுங்க சரியா? சரிம்மா.

வா மலரு சின்ன பசங்க தான எல்லாம் சரியாயிடும்.. என சொல்லிகொண்டே மெல்ல நடந்தனர் (தொடரும்)..