Pages

Friday, April 1, 2011

போதை மயக்கம் - 1

நாள் : 01/04/2011
நேரம் : காலை 07:10 மணி
இடம் : லாட்ஜ் ரூம்

யாரோ தட்ட நல்ல கனவு களைத்தும் கண் திறக்காமல் "டேய் லீவ் தானடா!". திரும்பவும் தட்ட "நண்பா பத்து நிமிசம்டா!". திரும்பவும் ஓங்கி தட்ட எரிச்சலுடன் " டேய் சொல்ரேன்லடா வெண்ண.." விழித்தால் போலீஸ். முகம் வியர்த்து தூக்கம் களைய "சார் என்ன சார்" என பதட்டத்துடன் கேட்க. "ஏண்டா பயப்படுற நீ தான் பண்ணியா?". கொஞ்சம் குழப்பத்துடன் "என்ன பண்ணியான்னு கேட்குறீங்க". சற்று எரிச்சலுடன் "தாயோளி நடிக்கதடா உன் மொகறைய பார்த்தா தெரியல குடிகாரப் பயலே! மனுசன நிம்மதியா தூங்க கூட விட மாட்டீங்களாட?" "சார் சும்மா... மரியாதையா பேசுங்க சார். இப்ப எதுக்கு காலங்காத்தால பஞ்சாயத்து பண்றிங்க? பசங்கள எங்க?" என கோபமாக போர்வையை விளக்கிக் கொண்டு எழ ஏட்டு ஓங்கி ஒரு எத்து விட எழுந்தவன் நிலை தடுமாறி கீழே விழுகிறான்."என்ன சார் அடிக்கிறீங்க?". ஏட்டு எரிச்சலுடன் "அடிக்காம உன் கையப்பருடா!".

Bottle

சிறிது பயம் கலந்த குழப்பத்துடன் வலது கையைப் பார்க்க ஒன்றும் இல்லாமல் எப்பவும் போல் இருக்க "என்ன சார்? அதான் ஒன்னும் இல்லையே? காலைலியே தண்ணிய கிண்ணிய போட்டீங்களா? போங்க சார் பேசாம. பசங்கள எங்க சார்?" ஏட்டு கையில் உள்ள லத்தியை வைத்து இடது கையை தொட்டு காண்பித்து "டேய் வெண்ண அந்த கைய பாருடா" என சொல்ல. சற்று எரிச்சலுடன் இடது கையை பார்க்க உள்ளங்கை முழுக்க இரத்தம். ஒன்றும் புரியாமல் "சார் என்ன சார் என்ன ஆச்சு? பசங்கள எங்க?". "செய்யுறதையும் செஞ்சுட்டு நடிக்கிறீங்களா?" என வெளியே தள்ள. "சார் ஒரு நிமிஷம் சார் கைலிய நல்ல கட்டிக்கிறேன்" என்று எழுந்து கைலிய ஒழுங்கு படுத்த கைலியில் பாதி இரத்தம். இடது புறம் நன்றாக திரும்பி பார்த்தல் பிரபுவின் மூக்கு கண்ணாடி, சிகரெட் பாக்கெட், போர்வை, பாய், பெல்ட் எல்லாம் இரத்தம். "போதும்டா வெண்ண நீ பார்த்தது போ" என்ன வெளியே தள்ள உடைந்து கிடந்தது பீர் பாட்டில் கண்ணாடி சில்களை தாண்டி வெளியே வந்தவன் அப்போது தான் உணருகிறான் வெளியே கேமரா, சன் டிவி ,கலைஞர் டிவி மைக் எல்லாம் இருக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் கதவின் ஓரம் நிற்க மற்ற போலீஸ் சுற்றி உள்ள மற்ற ரூம் ஆட்களை போக சொல்லி விரட்டி கொண்டிருந்தனர்.

ஏட்டு "டேய் நடடா வெண்ண" என்று சொல்லி தள்ள, இன்ஸ்பெக்டர் ரூம்குள் சென்ற மற்ற போலீசைப் பார்த்து "யோவ் எதையும் தொடாதீங்கயா, அந்த ரேகை பாக்குரவனுகள வரச் சொல்லியாச்சா? யோவ் இப்ப தானைய சொன்னேன் தொடாதனு எல்லாம் எவிடேன்ஸ்யா!" மறுபடி ஒருமுறை அவனைப் பார்த்துவிட்டு "எல்லாம் பெரிய இடத்து பயலுக ஜாக்கிரதை." சுற்றி இருந்த கூட்டத்தில் எல்லாரும் ஒரு பயம் கலந்த குழப்பத்துடன் பார்க்க ஏட்டு மட்டும் பொறுப்பாக அவனை தள்ளி கொண்டு போய் ஜீப்பை காண்பித்து ஏறி உட்காருங்க சாமி. பூஜை எல்லாம் கோவில்ல (ஸ்டேஷன்ல) போய் வச்சுக்கலாம். ஒன்றும் புரியாமல் நைட் அடித்த அரை போதையுடன் ஜீப்பில் ஏறுகிறான் கார்த்திக். உள்ளே முருகன் அழுதுகொண்டு இருக்க "என்னடா இதெல்லாம்? என்னடா ஆச்சு? பசங்கள எங்கடா?".அழுதுகொண்டே "டேய் சரவணன் செத்துட்டண்டா. நான் எழும்போது நீ மட்டும் தாண்டா தூங்கிட்டு இருந்த. இந்த போலீஸ் அடிக்கிறாண்டா". சரிடா அழாம சொல்லு. வெளியில் இருந்த லாட்ஜ் மேனேஜரை பார்த்து "சார் அப்பாட்டையும் அண்ணன்ட்டையும் சொல்லிருங்க சார்" என சொல்ல அவர் "இப்படி பண்ணிட்டேங்கலே தம்பி" என சொல்ல "யோவ் சொல்லுய முதல்ல".கடுப்பான ஏட்டு "வெண்ணைகளா பேசாம இருக்க மாட்டீங்களா? யோவ் என்னைய அந்த இன்ஸ் சொல்றான்? " என வெளியே நின்று கொண்டிருந்த போலீசிடம் கேட்க. இன்னொரு போலீஸ் "சார் நீங்க கிளம்புங்க அவர் ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வந்துருவாராம்". உடனே ஜீப்பில் பின்னாடி உட்கார்ந்து இருந்த ஏட்டு விலங்கை இருவர் கையிலும் ஜீப்புடன் சேர்த்து மாட்டிவிட்டு இறங்கி போய் முன்னாடி உட்கார்ந்து கொண்டு டிரைவரை பார்த்து "யோவ் எடுயா யாருக்கு காத்துட்டு இருக்க? உன் பொண்டாட்டியா வருது?". ஜீப் நகர ஆரம்பித்த உடனே "இப்ப சொல்றா அழாம சொல்லு" என முருகனிடம் கூற. முருகன் அழுதுகொண்டே ஆரம்பிக்கிறான் "எழுந்து வெளிய வந்தா சேதுவும் இன்னொருத்தனும் முன்னாடி போற ஜீப்ல போறானுகடா, சரவணன்ன ஆம்புலன்ஸ்ல ஏத்திட்டு போனானுகடா.". கார்த்திக் உடனே கொஞ்சம் சத்தம் கம்மியான குரலில் "சரி உன் மொபைல் குடு?". முருகன் உடனே "இல்லடா நண்பா!" கார்த்திக் கோபத்துடன் "டேய் மயிறு நான் தான் கைலி கட்டிருக்கேன் உனக்கென்னடா?". முருகன் மறுபடியும் அழுது கொண்டே "நான் எழும்போதே ஒரு போலீஸ் எல்லா மொபைலையும் எடுத்து பிளாஸ்டிக் கவர்ல போட்டு வச்சுருந்தாண்டா". கார்த்திக் அப்படியே தலையில் கை வைத்து உட்கார்ந்து விட ஜீப் வேகமாகா போய்க் கொண்டு இருந்தது.

நாள் : 01/04/2011
நேரம் : காலை 07:40 மணி
இடம் : போலீஸ் ஸ்டேஷன்

ஸ்டேஷன் வந்துவிட இறங்கி உள்ளே செல்ல சரவணன் பனியன் டவுசர் (தூங்கும் உடை) அணிந்து மற்ற மூவர் போலவே உட்கர்ந்து உள்ளான். கார்த்திக் மெல்ல ஏட்டிடம் சென்று "சார் ஏப்ரல் பூல் தான ஆக்க பாக்குறீங்க? நாங்கல்லாம் ஏமாருவமா?" என சிரிக்க ஏட்டு ஓங்கி ஒரு அரை வைக்கிறார். முருகன் கார்த்திக்கிடம் மெல்ல "மச்சி இப்படி தாண்ட இந்த ஆளு அடிச்சிட்டே இருக்கான் இப்ப எதுக்குடா அடிச்சான்?" அதற்கு கார்த்திக் "சரி அத விடு அங்க பாரு அவனுக இருக்கானுக நம்மள ஏப்ரல் பூல் ஆக்க பாத்துருக்கணுக" என சொல்லிக்கொண்டே நடக்க. ஏட்டு "போங்கடா போய் உங்க கூட்டாளிகளோட போய் உட்க்கருங்க" என சொல்லி விட்டு தூரத்தில் இருந்த இன்னொரு போலீசைப் பார்த்து "யோவ் இவனுகள பார்த்துக்க காலைலயே ஒரு எழவு, வாய கழுவிட்டு ரெண்டு இட்லிய பிச்சு போட்டுட்டு வரேன்" என சொல்லிகொண்டே வேகமாக நடந்தார். கார்த்திக் சிரித்துக் கொண்டே சரவணனிடம் போய் "மச்சி செம நாடகமா இருக்கு? யார ஏப்ரல் பூல் ஆக்க பாக்குற?எங்க அண்ணனும் இதுல கூட்டாளியா? அவன்தான் இந்த போலீஸ் எல்லாம் அனுப்புனனா?" உடனே கடும் கோபத்துடன் சரவணன் "என்னடா கிறுக்கு பூ.. மாதிரி பேசுற?". "டேய் நீ தாண்ட செத்துட்டேன்னு இவன் சொன்னான்!". "டேய் செத்தது பிரபுடா, என்னையே போலீஸ் தாண்டா எழுப்புனனுகா. எங்கள ஜீப்ல ஏத்திட்டு, பிரபுவ ஆம்புலன்ஸ்ல ஏத்திட்டு போய்டனுகடா.வண்டி நகழும் பொது தான் முருகன் வெளிய வந்தான் அவன் என்ன பார்க்கல அதான் தப்பா சொல்லிருக்கான்." அப்படியே கார்த்திக்கும் முருகனும் இடிந்த வண்ணம் உட்கார மழை பெய்ய துவங்கியது..
(தொடரும்..)

2 comments:

எல் கே said...

நல்லா இருக்குங்க. நல்ல சஸ்பென்ஸ் தொடருங்கள்

பொன்கார்த்திக் said...

நண்பர் எல் கே அவரகளுக்கு,

நன்றி நண்பரே தொடர்ந்து படியுங்கள்...

Post a Comment