Pages

Wednesday, April 21, 2010

ஒரு குட்டி ஆசை!

அன்று (31/05/2009) சரியாக மாலை நாலரை மணி Yahoo Email Alerter வேளையில் முங்கி இருந்த முருகனை தட்டி எழுப்பியது. வெளியில் வந்தவன் (எங்கிருந்து என்று கேட்டல் அடி தான்) மெல்ல அந்த மின்னஞ்சலை பார்த்தான் அதில் உங்கள் வங்கி கணக்கில் 12,024 வந்துள்ளது என அறிவிப்பு வந்தது. திடிரென வேலை செய்தது போதும் என்று அதை மூட்டை கட்டி வைத்துவிட்டு(கணினியை அமர்த்திவிட்டு) தன்னுடைய shoe மற்றும் tie சரிசெய்துவிட்டு சுற்றி இருந்த நண்பர்களுக்கு bye சொல்லிவிட்டு கிளம்பினான்.

வெளியில்வந்தவன் wallet இல் எதோ தேடினான். தேடியதை கண்டுகொண்டவன் போல மெல்ல நடக்க துவங்கினான். அப்போது அவனுடைய பழைய நினைவுகள் மனதிற்குள் ஓட துவங்கின(இங்கு சக்கரம் எல்லாம் சுத்த முடியாது). சரியாக 13 வயது அவனுடைய தாய்மாமா வீட்டிற்கு வந்திருந்தார். அவர் ஒரு அரசியல்வாதி அனால் முருகனுடைய அப்பா ஒரு சாதாரணமான பெட்டிக்கடை அம்மா அவ்வப்போது அப்பாவிற்கு உதவி செய்து கொண்டே வீட்டை பார்த்துக்கொள்வார். அனால் அவனுடைய மாமா மாணிக்கம் கொஞ்சம் வசதி படைத்தவர்(தலைக்கனத்திலும் கூட). அவர் வீட்டிற்கு வரும்போது கையில் ஒரு பெப்சி குளிர்பானம் பாட்டிலுடன் வந்தார். முருகனும் சரி அவன் தம்பியும் சரி முதன் முதலில் அதனை இப்போது தான் கிட்டத்தில் பார்க்கின்றனர். அவன் தம்பி குறும்பன், முருகன் காதில் எதோ முனுமுனுக்கிரன். இருவரும் தன்னை அறியாமல் சிரித்துக்கொள்ள அவர் மாமா, அத்தை இருவரும் அம்மாவிடம் எதோ பேசி கொண்டே இவனிடமும் எதோ கேட்கின்றனர் இவனும் எதோ சொல்ல ஆனால்இவன் கவனம் முழுதும் அந்த பாட்டில் தான்.

அதற்குள் அவன் SBI ATM நெருங்கிவிட பின் பாக்கெட்டை நொண்டி கொண்டே உள்ளே நுழைகிறான். கார்டை எடுத்து உள்ளே திணிக்க **** என்று எண்ணை அழுத்தி 100 ருபாய் எடுத்து வருகிறான். அவன் அந்த நோட்டை நன்றாக இரண்டு விரல்களால் தடவி கொண்டே(முதல் சம்பளம் அல்லவா) அருகில் இருந்த பெட்டி கடைக்கு போகிறான்(தம் அடிக்க இல்லங்க). "அண்ணாஒரு அரை லிட்டர் பெப்சி குடுங்கனா ,நல்ல கூலா" என்கிறான். அவன் அதை அவசர அவசரமாக வாங்கி பதட்டத்துடன் திறக்க அது பொங்கி கொஞ்சம் கிழே சிந்த, கொஞ்சம் பொறுமையாக கொஞ்சம் வேகத்துடன் (அது எப்படின்னு கேட்டக்திங்க) தான் வாயில் ஊற்றினான்(ஏன் இந்த பதட்டம்!). மெல்ல அந்த பெப்சியை உற்று பார்த்துக்கொண்டு மெல்ல பழைய நினைவுகளை உருட்டுகிறான்.

ஆசையாக அவனும் அவன் தம்பியும் ஒரு டம்ளரை எடுத்துகொண்டு ஓடி போய் அவன் மாமாவிடம் "மாமா கொஞ்சம் குடுங்க மாமா!" என்றான். அவர் நீ சின்ன பையன் இதெல்லாம் சாப்பிட கூடாது என்று ஏமாற்றுகிறார். அவர் கையில் சிறிது பெப்சி கொட்டிவிட கை கழுவ செல்கிறார். இவன் அருகில் சென்று உற்றுப்பர்த்து கொண்டு இருக்க மாமா "ஏன்டா திருடவ செய்ற?" எனகூற அம்மா வந்து ஒரு அடி வைக்கிறார். அன்றிருந்து அவன் பெப்சி என்றல் ஒரு வெறுப்பு அவன் மாமாவை போல. அன்று இரவு முழுதும் அழுது இறுதியில் "என் பணத்தில்(சம்பளத்தில்) தான் நன் இனி பெப்சி குடிப்பேன்!" என்று ஒரு உறுதி எடுத்து கொண்டு பள்ளிக்கு செல்கிறான்.பெப்சி பார்க்கும் பொழுது எல்லாம் அவனுக்கு இதே நினைப்பு தான். இப்போது அவன் முதல் சம்பளத்தில் பெப்சி குடித்துக்கொண்டு இருக்கிறான். அதே நேரம் அவன் கண்களில் இரண்டு சொட்டு கண்ணிர் வர அதை பார்த்த கடைக்காரர் "தம்பி நீதான் நல்ல கூலா கேட்ட இப்ப பாரு கண்ணிர் வருது!" என்கிறார். அவன் அப்படியே அவரை பார்த்து சிரித்து கொண்டே நடக்க ஆரம்பிக்கிறான்.

10 comments:

கார்க்கிபவா said...

இது உண்மையா கற்பனையா சகா? லேபிள் கற்பனைன்னுதான் போட்டிருக்கு. ஆனா கதைன்னு அவ்ரும்போது எதுக்கு பிராக்கெட்டுல மொக்கை?

புனைவல்லாத நகைச்சுவை எழுதும்போது அந்த பிராக்கெட் மொக்கை சூப்பரா இருக்கும். கதைன்னு வந்தா அது எடுபடாது. அதனால கேட்கிறேன்..

முதல் பதிவு..வாழ்த்துகள்.. அடிச்சு நொறுக்குங்க

பொன்கார்த்திக் said...

வருகைக்கு நன்றி சகா.
இனி நீங்கள் சொன்னதை முயற்சிகிறேன்.

Unknown said...

ithu kandippa kathai illa.. ithuna varra murugan ne thaana? sari anthaonnu vitta mama yaaru?

Unknown said...

கார்த்திக் நீ முருகன் குரும்பன் நம்ம குட்டையன் சரி மாமா எந்த மாமா KPN R PVM

பொன்கார்த்திக் said...

@nisha
இது ஒரு முழு கற்பனை!

அப்படி எல்லாம் யாரும் கிடையாது

ரிஷபன் said...

முதல் சம்பளத்துலன்னு நிறய்ய பிளான் வச்சிருப்போம்.. நல்லா இருக்கு ஆசை நிறைவேறினதை சொன்னது.. கற்பனையாய் இருந்தாலும்!

Unknown said...

not bad da, but good try, story enkayo irunthu sutta mathiri theriyuthu, eamathama iruntha sari....keep it up

பொன்கார்த்திக் said...

ரிஷபன் நன்றி சகா..

பொன்கார்த்திக் said...

vignesh thanks da..

cheena (சீனா) said...

அன்பின் பொன் கார்த்திக் - மதுரையா - பலே பலே - தெரியாமப் போச்செ .ம்ம்ம்ம்ம்

கத நல்லாவே போகுது - சொந்தக்க்காசுல பெப்சி குடிக்கணும்னு இலட்சியத்தோட வாழ்ந்த நாய்கன் வாழ்க. நல்லாவே இருக்கு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Post a Comment