Pages

Thursday, April 29, 2010

என் வாழ்விலும் ஒரு வசந்தம்

அன்று 6/1/2007 அதிகாலை (09.30 மணி) என்றும் போல் விடிந்தது. நானும் எப்போதும் எழுந்து தேடுதல் வேட்டையை துவங்கினேன்(சிகரெட்டை). கடைசியில் இரவு ஓளித்து வைத்திருந்த ஒரு சிகரெட்டை புகைத்து கொண்டு காலை கடன்களை முடித்து விட்டு கிளம்பினோம்(நன்,முத்து மற்றும் குமார்). சென்னையில் இருந்து கிளம்பிக்கொண்டு இருந்தோம் மதுரைக்கு(வீட்டுக்கு).முத்து "டேய் சீக்கிரம் கிளம்புட என்றான் " . எப்போதும் போல் கடைசியாக குளித்து விட்டு சாப்பிட்டு விட்டு நண்பர்களிடம் திட்டும் வாங்கிவிட்டு ஆட்டோவில் ஏறி எக்மோர் என்றேன் .முத்து "அண்ணா வேகமாக என்றான்".டிக்கெட் ஏற்கனவே புக் பண்ணியதால் அதில் ஏதும் பிரச்னை இல்லை.

ஆட்டோவில் இருந்து இறங்கிய முத்துவும்,குமாரும் சிகரெட் கூட வாங்காமல் வேக வேகமாக உள்ளே சென்றனர்.ஒன்றும் புரியாமல் நானும் தொடர்ந்தேன்(சிகரெட்டை வாங்கிக்கொண்டு). வேகமாக போனவர்கள் S3 பெட்டியில் ஒட்டியிருந்த பயணிகள் பட்டியலை பார்த்தனர். முத்து "நண்பா ஒன்னு தாண்டா" என்றான். குமார் "டேய் நல்ல பாருடா ரெண்டு டா" என்றான். "அப்பாட சூப்பர் டா! "என்று இருவரும் பெருமூச்சு விட்டனர். நான் ஒன்றும் புரியாதவனாய், கோபமாய் "என்னடா ஒன்னு,ரெண்டு? தம் கூட அடிக்காம என்னடா அவசரம்" என கேட்க முத்து " நண்பா நம்ம கூட ரெண்டு பொண்ணுக வர போறாங்கடா" என்றான். சிரித்துக்கொண்டே சீட்டை தேடி அமர்ந்தோம்(வைகை எக்ஸ்பிரஸ்). முத்துவும் குமாரும் பேட்டியின் இரண்டு வாசலிலும் நின்று கொண்டு அந்த பெண்களின் வருகைக்காக காத்திருந்தனர்.இரயில் மெல்ல நகர ஆரம்பித்தது இரு பெண்களும் வர வில்லை. எதோ சிட் பண்டில் போட்டு ஏமாந்தவர் போல வந்து அமர்ந்தனர். சற்று எங்களுக்குள் சலசலப்பு. நான் " டேய் அவளுக டிக்கெட் கான்செல் பன்னிருப்பாள்கடா " என்றேன். முத்து " confident மச்சி confident " என்றான்!!!.குமார் "என்னடா பயணிகள் பட்டியலில் பெயரும் வயசும் மட்டும் தான் போடுறாங்க! ஏன்டா எங்க ஏறுவாங்க எங்க இருந்குவாங்கனு போட்ட ஈசிய இருக்கும்ல " என்று இரயில்வே துறையை திட்டினான். நான் பதிலுக்கு "அட்ரஸ்,போன் நம்பர் போட்டிருந்தால் இன்னும் வசதியா இருக்கும்ல " என்று மொக்கையை போடா இருவரும் முறைத்தனர்.இதற்கு மேல் இருந்தால் அடிவிழும் என்று "நண்பா நான் ரெம்ப நேரமா தம் அடிக்கலடா இந்த வந்துரேன்" என்று மெல்ல டோயலேடுள் நுழைந்தேன். தம்மை முடித்து விட்டு வெளியே வந்து பார்த்தால் ஒரு அழகிய தேவதை(கொஞ்சம் பழசுதான் பொறுத்துக்கோங்க!) அமைதியாய் தியானத்தில் இருப்பது போல் அமர்ந்திருந்தால். சிகரெட்டும் முடிந்தது நானும் முடிந்தேன்.மெல்ல இருவரையும்(குமார்.முத்து) பார்த்தால் வாயில் இருந்து அருவியாக ஜொள் ஓடிக்கொண்டு இருந்தது. மூவருவியாக நானும் சேர்ந்து கொண்டேன்.

மெல்ல அவளை ரசிக்க ஆரம்பித்தேன். வெள்ளை நிற சுடிதார் அனால் அது அப்படி ஒன்றும் வெண்மையாக இல்லை. ஏனென்றால் அவள் அதை விட கலராக இருந்தால். சிறிது முடி முன்னால் வந்து விழ அவள் அதை சரி செய்வது பாலில் தேன் விழுந்து மறைவது போல் அழகாக இருந்தது. மிகவும் எளிமையாக இருந்தால். ஒரு வேலை அது தான் என்னை கொன்று விட்டதோ என்று தெரியவில்லை.
கழுத்தில் ஒரு சின்ன செயின். காலில் ஒரு சின்ன அழகான கொலுசு அவ்வளவுதான். நான் எங்கே இருக்கிறேன் என்ன செய்கிறேன் என்று தெரியவில்லை அனால் சந்தோசமாக இருக்கிறேன் என்று மட்டும் தெரிந்தது. நடந்து போகும் யாராவது அவளை உரசினால் என்னை அறியாமல் எனக்கு கோபம் வருகிறது கையை இறுக்கி மூடிக்கொள்கிறேன் (கில்லி விஜய் போல). ஒருமணி நேரம் போனது தெரியவில்லை

குறட்டை சத்தம் என்னை வெகுவாக தொந்தரவு செய்ய திரும்பி கோபத்துடன் பார்த்தால் முத்துவும்,குமாரும் இரயில் சத்தத்தை விட அதிகமாக போட்டி போட்டுகொண்டு குறட்டை. நான் விடவில்லை திரும்ப அவளை உற்று கவனிக்க ஆரம்பித்தேன்(ஜொள்). ஒரு சிறிய வருத்தம் அவள் ஒரு முறை கூட ஒரு கண்ணில் கூட ஒரு கல்லை பார்ப்பது போல் கூட பார்க்க வில்லை. நான் விவேகானந்தர் பொன் மொழியான "எதற்கும் கலங்காத நம்பிக்கை எதற்கும் தளராத தன்னம்பிக்கை வேண்டும்" என்று நினைத்துக்கொண்டு தொடர்ந்தேன். “இப்படியே இரண்டு மணிநேரம் சென்றது இரண்டு நொடி போல”. அப்போது தான் எழுந்தான் வில்லன் முத்து "நண்பா தம் குடுடா" என்றான். வண்டியில் இருந்து வழுக்கி விழுந்தவன் போல அவளை பார்த்துக்கொண்டே மெல்ல மறைத்து எடுத்து கொடுத்தேன். முத்து அதற்கு "பாக்கெட் வேண்டாம் டா ஒன்னு குடு போதும்" என்றான். "முதல்ல எழுந்து போடா "என்றேன் கோபமாக. கெட்டதிலும் ஒரு நல்லது போல "அவள் ஒரு சிறு புன்னகை பூத்தல்!". அப்போது தன எனக்கு தெரியும் அவளும் என்னைப் பார்க்கிறாள் என்று. மனதிற்குள் எதோ "சாவின் விளிம்பில் இருந்து உயிர் பிழைத்தது போல் ஒரு திருப்தி."
வந்தவன் மறுபடி தூங்கிவிட்டான். அழிந்தான் வில்லன் என்று நானும் என் ஆஸ்தான வேலையை தொடர்ந்தேன். அவள் அவ்வப்போது திரும்புவதும் என்னை பார்ப்பதும் கொஞ்சம் கொஞ்சமாக கூடியது. ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் இந்திய T20 உலகக் கோப்பையை ஜெயித்த பொது எப்படி(சந்தோசமா) இருந்ததோ அப்படி இருந்தது. நேரமாக நேரமாக எதோ நன் இழந்து கொண்டே போவது போல் உணர ஆரம்பித்தேன். வந்தான் இன்னொரு வில்லன் ஒரு 35 வயது இருக்கும் பேச ஆரம்பித்தான் பேசினான் பேசினான் பேசிக்கொண்டே இருந்தான் அவள் என்னை பார்த்துக்கொண்டே அவனிடம் பேசிக்கொண்டு இருந்தால். அவள் போனில் பேசுவது போல என்னை தொடர்ந்து பார்த்து சிரித்துக்கொண்டே இருந்தாள். அப்போது தன நியாபகம் வந்தது நன் கடைசி 4 மணி நேரமாக நான் தம்மடிக்கவே இல்லை, சாப்பிடவும் இல்லை.

மதுரை நெருங்க இரண்டு மணி நேரம் இருந்தது அவள் எதிரில் இருந்த குழந்தையுடன் விளையாடுவது போல்(நான் இல்லங்க வேற குழந்தை) மெல்ல என்னை தொடந்து பார்க்கவும் சிரிக்கவும் ஆரம்பித்தாள். திடிரென்று எழுந்து அருகில் வந்தால் என் முகம் வேர்த்து விட்டது. கிட்ட வந்து அவள் பையை எடுத்து அமர்ந்தாள். எனக்கு வியர்த்ததை பார்த்து சிரித்துக்கொண்டே காலனியை சரி செய்தல் ஒன்றும் புரியாதவனாய் நான் விழிக்க வந்தது திண்டுக்கல் இரயில் நிலையம். திடிரென்று என்னைப் பார்த்துக்கொண்டே தங்கை மற்றும் அப்பாவுடன் இறங்கினாள். நான் படி வரை சென்று எதோ இழந்தவன் போல பார்த்துக்கொண்டே இருக்கிறேன் மெல்ல இரயில் நகர்ந்தது. எதோ ஒரு பெரிய இழப்பு, மனதில் ஒரு வித பாரம். என்ன செய்வது என்று தெரியாமல் என்னையும் அறியாமல் கண்ணீர் வருகிறது. கைக்குட்டை வைத்து மறைத்துக்கொண்டே டோயலேட்டுள் நுழைகிறேன். தொடர்ந்து நான்கு சிகரெட் பிடிக்கிறேன். பின் வேறு வழியின்றி சீட்டில் வந்து அமர்கிறேன். அப்போதும் முத்துவும்,குமாரும் தூங்குகின்றனர். என்னிடம் அந்த 35 வயதுள்ளவன் மொக்கையை போடுகிறான். வேறு வழியின்றி திட்டவும் முடியாமல் அழவும் முடியாமல் பதில் சொல்லிகொண்டே இருக்க கேட்டான் ஒரு கேள்வி "தம்பி என்ன பண்ணிற்றிந்கீங்க?". நான் "இன்ஜினியரிங் 3rdrd இயர் " என சொல்ல. "எந்த டிபர்ட்மென்ட் "என்கிறான். "யோவ் IT யா " என்றேன். சொன்னான் ஒரு தெய்வீக வழி "தம்பி இங்க உட்கார்ந்திருஞ்சுல ஒரு பொண்ணு" (நான் ஆவேசமாக) ஆமா "அதுவும் இன்ஜினியரிங் தானம்பா" என்றான். "அண்ணா எந்த காலேஜ்னா?" என்றேன் அது "PSNAPSNA காலேஜ்பா 2nd இயர் படிக்குதுப்பா." ஐயோ வெளிச்சம் கூட ஆரம்பித்தது. நான் மறுபடியும் "அண்ணா எந்த டிபர்ட்மென்ட்னா" என்றேன். "அதுவும் IT தம்பா" என்றான்.சந்தோசம் தாளாமல் இருவரையும் எழுப்பி இதை சொல்லி இம்சித்து மீதமிருந்த சிகரெட்டையும் முடித்தோம்.

மீதத்தை அடுத்த பதிவில் எழுதுகிறேன்!!!

9 comments:

Unknown said...

yaaru karthi

பொன்கார்த்திக் said...

அக்கா சும்மா கற்பனைக்கா! அப்படி எல்லாம் நல்ல விஷயம் நம்ம வாழ்க்கைல எது?

sudhagar said...

dai atha pathu aeluthuna enkita matum solu da

ரிஷபன் said...

அக்கா சும்மா கற்பனைக்கா! அப்படி எல்லாம் நல்ல விஷயம் நம்ம வாழ்க்கைல எது?

ம்ஹூம்.. நம்ப முடியல.. ஏன்னா நிஜம் போலவே எழுத்து!

Unknown said...

i like this story da.... nalla iruku....

பொன்கார்த்திக் said...

vignesh thanks da..

பொன்கார்த்திக் said...

ரிஷபன் நன்றி சகா..

Unknown said...

karthik neenga oru ponayum vidurathu ila pola.....ivanga yaru

பொன்கார்த்திக் said...

வாங்க சூர்யா தங்கள் வருகைக்கு நன்றி..
அவுங்க உங்களுக்கு தெரிஞ்ச பொண்ணு தான் யோசிச்சு பாருங்க..

Post a Comment