Pages

Sunday, October 10, 2010

நான் ஒன்னும் பன்னலம்மா!

Child Friends

கார்த்தியும் ராஜேஷும் மூச்சு முட்ட ஓடிவர வீட்டிற்குள் நுழைந்ததும், கார்த்தி அம்மா ஏண்டா டேய் மெதுவா வாங்கடா விழுந்துட்டீங்கனா? போய் முகத்த கழுவிட்டு வாங்க சாப்டலாம். கார்த்தி மெதுவாக இல்லம்மா அது.... உடனே அம்மா டேய் என்னடா ராஜேஷ் வீட்ல எதும் சாப்டிங்களா? போங்கடா போயிட்டு சீக்கரம் வாங்க. அதற்குள் ராஜேஷ் அம்மா "ஓடவா செய்றீங்க உங்க ரெண்டுபேரு காலையும் உடைச்சு போடணும்டா" என உள்நுழைய. கார்தியம்மா கேட்டிங்களா அவனுக என்ன பன்னானுகனு நீங்க அவனுகளுக்கு நல்லா இப்படி சாப்பாடு போடுங்க அவனுக இன்னும் நல்ல சேட்ட பண்ணட்டும். எண்ணக்க என்ன பன்னாணுக? அவனுகட்டயே கேளுங்க. டேய் என்னடா பண்ணீங்க? அம்மா அதுவந்து..

டேய் ராஜேஷ் நீ சொல்ற அவன் கிடக்கான். அம்மா என்று திருதிருவென்று விழிக்க. டேய் சொல்லுங்கடா. அம்மா நாங்க எப்பவும் விளாடுரமாரி நம்ம முனியாண்டி கோவில்ட விளையாடிட்டு இருந்தமா, அப்பபப.. டேய் சொல்லுங்கடா. நான் ஒரு பந்த சாக்கடைக்குள்ள அடிசுட்டேம்மா. சரி இதுக்கா பசங்கள திட்டுற?அதுமட்டுமா மேல சொல்லுங்கடா.. டேய் என்ன நடந்துச்சு முழுசா சொல்லுங்கடா. இல்லம்மா அப்பறம் கார்தியடிச்ச பந்து அசோக் மேல பட்டு அவனும் சாக்கடைல விழுந்துட்டாம்மா. அவன தூக்க போனா அவன் உன்னால தான்னு சொல்லி கல்லால அடிச்சுட்டு ஒடுனனா, இவனும் கல்லால திரும்ப அடிச்சான் அது அஞ்சாநம்பர் வீட்டு கண்ணாடில பட்ட்ருசுமா.. டேய் மேல அடிஎதும் பட்ட்ருக்காடா? என உடலை அம்மா துழாவ , அப்பறம்? கார்தியம்மா என்ன கதையா கேக்குறீங்க?

விடும்மா ஒரு கண்ணாடி தான வாங்கிகொடுத்துருவோம். டேய் இனிமே பார்த்து விளாடனும் சரியா? சரிம்மா.. கார்தியம்மா அத விடுங்க எங்க வீட்ல என்ன பன்னானுகனு கேளுங்க? என்னடா இது? இல்லம்மா நாங்க மேல பட்ருந்த சாக்கடைய கழுவ தான் போனம். அதுக்குள்ள பால்காரன் வந்தான். அவன்ட வாங்கி வைக்கும் பொது ராஜேஷ்தம்மா கொட்டிட்டான். அப்பரம் அத தொடச்சுட்டு அதே அளவுக்காக கொஞ்சம் தண்ணி ஊத்த சொன்ன இவன் நெறையா ஊத்திட்டம்மா. சரி கொஞ்சத்த கீழ ஊத்திட்டு வைக்கலாம்னு ஊத்துனோம் அப்ப இவன் தம்பி கோபி பார்துட்டாம்மா. அப்ப அவன் பால கீழயா ஊத்துறீங்க அம்மா வந்ததும் சொல்ரேன்டின்னு சொன்னான். சரி சரி விடும்மா இங்க பால் இருக்கு எடுத்து போய் காபி போடு விடும்மா. இனிமே இப்படி பன்னதிங்கடா.. இப்ப சாப்டலாம் வாங்க..

கார்தியம்மா முழுசா கேளுங்கா சொல்லுங்கடா என்ன பண்ணீங்கனு. அம்மா அப்ப கோபிட்ட சொல்லாதடா உனக்கு என்ன வேணுனாலும் தரோம்னு சொன்னோம்,அவந்தம்மா அந்த கிரைண்டர்ல உக்காந்து சுத்தனும்ன்னு சொன்னான். டேய் என்னடா பண்ணிங்க அம்மா பதட்டத்துடன். இல்லம்மா அந்த மாவு தள்ளும்ல அதையும் இன்னொன்னு பெருசா இருக்கும்ல அதையும் மூணு பேரும் சேந்து வெளிய போட்டுட்டு அவன உட்க்கார வச்சு சுச்சு போட்டம்மா அப்ப தான் ராஜேஷ் அம்மா வந்தாங்க வந்த உடனே சுச்ச அமத்திட்டு அவன தூக்கி எதோ பாத்தாங்க. பாத்துட்டு எங்கள அடிக்க வந்தாங்க அதன் வேகமா ஓடிவந்தோம். மலரு கோபிக்கு எப்படி இருக்கு என்று இடுப்பில் வைத்திருந்தவன வாங்க. எருமைகளா அறிவு இல்ல எது எதுல விலாடராதுன்னு.. அப்பா வரட்டும் உங்க ரெண்டு பேரையும் கொண்டு போய் ஆஸ்டல்ல சேத்ததான் சொன்ன படி கேப்பீங்க. அம்மா ஆஸ்டல் வேண்டாம்மா நாங்க இங்கயே இருக்கோம் இனிமே சேட்ட பண்ண மாட்டோம் என அழ.. சரி போய் தட்ல சோறு போட்ருக்கேன். போய் சாப்பிடுங்க சரியா? சரிம்மா.

வா மலரு சின்ன பசங்க தான எல்லாம் சரியாயிடும்.. என சொல்லிகொண்டே மெல்ல நடந்தனர் (தொடரும்)..

13 comments:

பனித்துளி சங்கர் said...

அருமை ரசிக்கும் அவகையில் மிகவும் நேர்த்தியாக எழுதி இருக்கிறீர்கள் . பகிர்வுக்கு நன்றி தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்

பனித்துளி சங்கர் said...

நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !

Unknown said...

கார்த்தி
சித்ரா அத்தைகிட்ட இன்னும் நிரைய சேட்டைகளை கதைகதையா சொல்லுவாங்க

பொன்கார்த்திக் said...

சங்கர் தங்கள் வருகைக்கு நன்றி சகா !

Word verification -ஐ நீக்கி விடுகிறேன்!!

பொன்கார்த்திக் said...

அக்கா சித்ரா அத்தைய பத்தி தான் அடுத்த பதிவு!

கார்க்கிபவா said...

:))

தொடரா? சூப்பர் :)

எஸ்.கே said...

சிறப்பாக உள்ளது. தொடரட்டும்.

பொன்கார்த்திக் said...

கார்க்கி நன்றி சகா..
தொடர் தான்..

பொன்கார்த்திக் said...

எஸ்.கே நன்றி சகா..

ரிஷபன் said...

ரசிக்கிற மாதிரி குறும்புகள்.. ரசிக்கிற விதத்தில் எழுத்து நடை.. தொடரட்டும்

பொன்கார்த்திக் said...

நன்றி சகா..

Unknown said...

அருமை நண்பா

பொன்கார்த்திக் said...

நன்றி நண்பா..

Post a Comment