Pages

Sunday, December 19, 2010

ரஜினியா கவுண்டமணியா?

நண்பன் ஒருத்தன் ஒர்குட்ல தாடியோட இருந்த போட்டோவ பார்த்துட்டு உனக்கு தாடி நல்லா இல்லடா, நம்ம தலைவர் ரஜினி மாதிரி ஹேர் ஸ்டைல் வை சூப்பரா இருக்கும்னு கால் பண்ணி சொன்னான். சொன்னது மட்டும் இல்லாம ரஜினி போட்டோவ மெயில் வேற அனுப்புனான். சரி நானும் இவ்வளவு சொல்றானே செய்து பார்ப்போம்னு சொல்லி காலைல எழுந்திரிச்சு முதல் வேலையா கூட இருக்க கொஞ்சம் ஹிந்தி தெரிஞ்ச நண்பன் ஒருத்தன கூட்டிகிட்டு முடி திருத்தகத்துக்கு போனேன். (நமக்கு தான் ஹிந்தி தெரியாதே என்ன பண்ண?) போகும் போதே நண்பா ரஜினி ஹேர் ஸ்டைல்ல வெட்டனும்டா அவன்ட தெளிவா சொல்லிருனு சொல்லிட்டே நடக்குறோம். அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் நண்பா நீ வா போலாம்னு இழுத்துட்டு போறான்.

கடைசியா கடையை கண்டுபிடிச்சுட்டோம். உள்ள நுழைஞ்ச உடனே சிரிச்ச முகத்தோட வாங்க வாங்கனு ஹிந்தில சொன்னாரு(ஹிந்தி உனக்கு எப்படி தெரியும்னு கேட்க கூடாது). உள்ள அவர தவற யாருமே இல்ல. டேய் நண்பா யாருமே இல்லடா வாடா வேற கடை பார்க்கலாம். அதான் இவர் இருக்கர்லடா போதும் உட்க்கார்டானு மட்டைய கட்டி இறக்கிட்டான். டேய் நேத்து நீ வச்சிருந்த சரக்க நான் குடிசுட்டேன்னு கோபம் எதும் இல்லையே?.ஏன்டா சம்மந்தம் இல்லாம இப்ப அத கேக்குற? இல்லடா அத மனசுல வச்சு பலி வாங்கிறாதடா உன்ன நம்பி தான் மண்டைய குடுக்கிறேன். சரிடா நான் பாத்துக்கிறேன். டேய் அந்த ரஜினி ஸ்டைல் சொல்ற முதல்ல. அவனும் எதோ எதோ சொல்ல கடைசியா பழைய செய்திதாள்ல இருந்து ரோபோ ஐம்பதாவது நாள் படத்த காண்பிச்சான். டேய் இந்த ஸ்டைல் இல்லடா வேற ரஜினி ஸ்டைல்னு சொன்ன அவனுக்கு தெரியல. சரி வேற வழி இல்லாம கூட இருந்தவன அனுப்பி ரூம்ல இருந்த மடி கணினிய எடுத்துட்டு வர சொன்னேன் வஞ்சுக்கிட்டே போயிட்டு வந்தான்.

மெயில் இன்பாக்ஸ் திறந்து நண்பன் அனுப்பிருந்த போட்டோவ காண்பிச்சேன். சரி உக்காருங்கன்னு சொன்னான். கடவுள் மேல பாரத்த போட்டுட்டு இவனுக ரெண்டு பேரையும் நம்பி உக்காந்தேன். உட்க்காந்த உடனே எதோ துணி எல்லாம் போத்தி தண்ணி எல்லாம் தொளிச்சு மாவு பிசையா போற மாதிரி ஆரம்பிச்சான். பையா ஒரு நிமிஷம் டேய் நண்பா சொல்லீட்டல்ல ரஜினி ஸ்டைல் தான? அட அமடானு சொல்லிட்டு திரும்ப எதோ ரெம்ப நீளமா ஹிந்தில சொன்னான். டேய் நண்பா இதுல ரஜினி பேரே வரலையடா? டேய் பேசாம உட்க்காருடா சரியா வெட்டுவான். சரி இதுக்கு மேல பேசுனா எந்திருச்சு போயிடுவான்னு சொல்லிட்டு நானும் அமைதியா உட்கார்ந்துட்டேன். அவன் ஆரம்பமே திருப்பதில எடுக்கற மாதிரி சவர கத்திய எடுத்தான். யோவ் யோவ் இருயா!! நண்பா என்னடா இது? அங்க பார்டா பிளேடு மாத்துரார்டா.ஏன்டா பதர்ற? டேய் பக்கத்துலயே இருடா வேற எதும் பண்ண கூடாதது பண்ணிற போறான். சரிடா நான் பக்கத்துலயே நிற்கிறேன்.

சரி நண்பன் தான் பக்கத்துல நிட்க்கிரானு நம்பி திரும்ப உட்க்கார்ந்தேன் தொடக்கத்துலயே மொத்தமா கொத்தா முன்னாடி இருக்க முடிய பிடிச்சான். எனக்கு உயிரே போயிருச்சு.யோவ் யோவ் இருயானு எழுந்திருசுட்டேன். டேய் இப்ப என்னடா? நான் தான் பக்கத்துல இருக்கேன்லடா அடப்பாவி இந்த முன்னாடி முடி வளர்க்க ஒரு வருஷம் ஆச்சுடா. அவன பாத்து வெட்ட சொல்றா. நண்பா அந்த லேப்டாப்ப எடுத்து கண்ணாடி பக்கத்துல வை. அந்த பார்த்துக்கிட்டே அது மாதிரியே வெட்டட்டும் நானும் அப்படியே சரி பார்த்துக்குவேன். நீ என்ன பெரிய வாத்தியாரா சரி பார்க்க. டேய் இது என் மண்டடா நான் தான் எல்லாம். போய் தொலன்னு எடுத்து முன்னாடி வச்சுட்டான்.

திரும்பவும் உட்க்கார்ந்தேன். இப்ப முன்னாடி வேண்டாம் பின்னாடி இருந்து ஆரம்பின்னு நண்பன் அவர்ட சொல்ல அவரும் ஆரம்பிச்சு ஒரு அஞ்சு நிமிஷம் வேட்டிகிட்டே இருந்தான். ஒன்னும் புரியல பின்னாடி இருந்த கண்ணாடியும் தெரியல. டேய் அந்த கண்ணாடிய எடுத்து தெரியுற மாதிரி பிடிடானு சொன்னேன். போடனுட்டன் அப்புறம் கெஞ்சி கூத்தாடி சரின்னு ஒத்துக்கிட்டான். ஒரு வழியா பின்னாடி வெட்டி முடிச்சுட்டன். இப்ப வலது பக்கம் காதுக்கு மேல வெட்ட வந்தான் இப்ப தான் நல்லா கவனிக்குரேன் அவன் கை பயங்கரமா நடுங்குது.அடப்பாவி இருடான்னு சொல்லி மறுபடி எழுந்துரிச்சேன். நண்பன் ஒரு கைல கண்ணாடியோட இப்ப என்னடா? நண்பா அவன் கை பயங்கரமா நடுங்குது காத போட்டர போறான்டா. டேய் அதெல்லாம் நடக்காது நான் பர்துக்கிரேண்டா? என்ன பார்ப்ப காத வெட்டுனதுக்கு அப்புறம் எப்படி வெட்டுனான்னா? போதும்டா சாமி ரஜினி ஹேர் ஸ்டைல் இல்லாமகூட இருந்திறலாம் ஆனா காது இல்லாம அம்மாடியோவ் ஆள விடுடா. டேய் பாதி வெட்டி பாதி வெட்டாம? என்னது பாதி வெட்டிட்டானா? டேய் முடிய சொன்னேன்டா உட்க்காருடா. அப்படினா ஒரு சின்ன வேண்டுகோள். இப்ப என்னடா? அவன் அந்த சவர கத்திய உபயோகபடுத்தக்கூடாது. பின்ன எப்படிடா சவரம் பண்றது? அந்த ட்ரிம்மர் மெசின்?

சரி இப்ப எல்லாம் முடிஞ்சு முன்னாடி வந்தான். திரும்பவும் கொத்தா நிறையா முடிய பிடிச்சான் திரும்பி நண்பா ஒரு வருஷம்டா. மெதுவா வெட்ட சொல்டா வெட்டிட்டா வளர வேற செய்யாதுடா. சரிடா திரும்பு சாவடிக்காத. மறுபடியும் நிறைய முடிய பிடிச்சான் திரும்பி சொல்லலாம்னு பார்த்த திரும்ப முடியல பார்த்த இவனும் அவனும் கூட்டு சேர்ந்து தலைய இவன் அழுத்தி பிடிக்க அவன் கதற கதற வெட்டி முடிச்சுட்டன்.

கடைசியா லேப்டாப்ல ரஜினி தெரியுறாரு கண்ணாடிய பார்த்தா கரகாட்டக்காரன் கவுண்டமணி இருக்காரு. அடப்பாவிகளா கதாநாயகன் மாதிரி வெட்ட சொன்ன காமெடியன் அக்கிட்டீங்கலேடா. போங்கடா டேய் இதுக்கு லேப்டாப் வேற நாலு கண்ணாடி வேற அப்படின்னு கிளம்புனா. கடைக்காரன் முறைக்குறான் சரி நம்ம பண்ண அலும்புக்கு தான் முறைக்குறான்னு பார்த்தா வெளிய போற வழிய மறைக்குறான் என்னன்னு கேட்ட எதோ ஹிந்தில விறான் நண்பன்ட்ட என்னனு கேட்ட காசு கேட்க்குறாண்டா. எவ்வளவுடா முன்னூறு ரூபா டா இந்த கவுண்டமணி கட்டிங்க்க்கு இது வேறயா தமிழ்ல திட்டிக்கிட்டே கொடுத்தேன். அவன் என் நண்பன்ட்ட எதோ ஹிந்தில சொல்லிட்டு இருந்தான் நான் நடக்க ஆரம்பிச்சுட்டேன்.

வெளிய வந்த உடனே நண்பா அவன் உண்ட எதோ சொல்லிட்டு இருந்தனே என்னடா அது? அத விடு நண்பா. ஏன்டா எதும் கெட்ட வார்த்தையா? இல்ல நண்பா வேகமா நட. அட சும்மா சொல்டா. உனக்கு முன்னாடி ஒரு குழந்தை முதல் தடவை முடி வெட்ட வந்துச்சாம் அது கூட இந்த அளவுக்கு இம்சிக்கலன்னு சொன்னனடா. போடா டேய் குழந்தைக்கு அதும் பட்னா குழந்தைக்கு ரஜினி தெரியுமா கவுண்டமணி தெரியுமா? அதும் இவன் கடைக்கு நம்மள தவற வேற ஆளா உன்ன ஏமாத்துறான் நண்பா. அந்த குழந்தைக்கு ரஜினி தெரியுமோ கவுண்டமணி தெரியுமோ தெரியாதுடா. ஆனா உன்ன மாதிரி இம்சிக்க தெரியாதுடா. அது மட்டும் இல்ல இன்னொன்னும் சொன்னான் உன்ன இனிமே இந்த பக்கம் அந்த லப்டோப்போட பார்த்தான் சவர கத்திய நடு மண்டைல நச்சின்னு இறக்கிருவேன்னு சொல்லிருக்கன். போடா டேய் போடா. ரூம திறந்து உள்ள போலாம்னு பார்த்தா எல்லாரும் மொத்தமா எதிர் பார்த்து நின்னு சிரிக்கிராணுக. இவன்தான் லேப்டாப் எடுக்க வந்தப்ப எல்லாருட்டையும் சொல்லிட்டு வந்திருக்கான். கால்ல இருந்த செருப்ப எடுத்துட்டு விரட்டுனா....

Karthik

சிரிச்சாச்சா போங்கயா பொய் கருத்து குத்து குத்திட்டு பிள்ள குட்டிகள படிக்க வையுங்க..

2 comments:

gurucoders said...

dai trouser pandi unoda hair style super da ..............

பொன்கார்த்திக் said...

நன்றி நண்பரே... தங்கள் வருகைக்கு நன்றி
நீங்கள் என்னுடைய பள்ளி கால நண்பர் என்று நினைக்கிறேன்..
கொஞ்சம் தெளிவாக சொன்னனால் நன்று..

Post a Comment